குஜராத்தில் மீண்டும் தமிழர்கள் பட்டாளம்!

வாஷிங்டன் சுந்தரை ரூ. 3.20 கோடிக்கும் சாய் கிஷோரை ரூ. 2 கோடிக்கும் குஜராத் தேர்வு செய்துள்ளது.
குஜராத்தில் மீண்டும் தமிழர்கள் பட்டாளம்!
ANI
1 min read

கடந்த வருடம் குஜராத் டைடன்ஸ் அணியில் சாய் சுதர்சன், ஷாருக் கான், விஜய் சங்கர், சாய் கிஷோர், சந்தீப் வாரியர் என 5 தமிழக வீரர்கள் இடம்பெற்றார்கள். சிஎஸ்கே அணியில் ஒரு தமிழக வீரரும் இடம்பெறாத நிலையில் 5 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பளித்ததால் குஜராத் அணிக்குப் பாராட்டுகள் குவிந்தன.

2025 ஐபிஎல் போட்டிக்காக தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சனை ரூ. 8.50 கோடிக்கும் ஷாருக்கானை ரூ. 4 கோடிக்கும் தக்கவைத்த குஜராத் அணி, மெகா ஏலத்திலும் தமிழக வீரர்களைத் தேர்வு செய்வதற்கு முக்கியத்துவம் அளித்தது.

வாஷிங்டன் சுந்தரை ரூ. 3.20 கோடிக்கும் சாய் கிஷோரை ரூ. 2 கோடிக்கும் குஜராத் தேர்வு செய்துள்ளது. இதனால் கடந்தமுறை போலவே 2025 ஐபிஎல் போட்டியிலும் குஜராத் அணியில் தமிழர்களின் பங்களிப்பு அதிகமாகவே இருக்கப் போகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in