
ஐபிஎல் மெகா ஏலத்தில் முதல் வீரராக அர்ஷ்தீப் சிங் ரூ. 18 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2025 மெகா ஏலம் இன்றும் (நவம்பர் 24) நாளையும் (நவம்பர் 25) ஜெட்டாவில் நடைபெறுகிறது. மொத்தம் 577 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கின்றனர். பிரபல வீரர்கள் பட்டியலிலிருந்து ஏலம் தொடங்கியது.
இதன்படி முதல் வீரராக ஏலத்தில் விடப்பட்ட அர்ஷ்தீப் சிங் ரூ. 15.75 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார். பஞ்சாப், அர்சிபி, குஜராத் இடையே கடும் போட்டி நிலவியது.
கடைசியாக ஆர்டிஎம் முறையைப் பயன்படுத்தி ரூ. 18 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார் அர்ஷ்தீப் சிங்.