சென்னையில் ஐபிஎல் இறுதிச் சுற்று: முழு அட்டவணை வெளியீடு!

அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் முதல் தகுதிச் சுற்று ஆட்டம் மற்றும் எலிமினேட்டர் ஆட்டமும் நடைபெறுகிறது.
ஐபிஎல் 2-ம் கட்ட அட்டவணை வெளியீடு
ஐபிஎல் 2-ம் கட்ட அட்டவணை வெளியீடு@ChennaiIPL

ஐபிஎல் 2024 போட்டிக்கான 2-ம் கட்ட அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதால் மார்ச் 22 முதல் ஏப்ரல் 7 வரையிலான முதற்கட்ட அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்ட நிலையில் 2-ம் கட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து ஆட்டங்களும் இந்தியாவில் தான் நடைபெறுகிறது.

இந்நிலையில் ஏப்ரல் 8 அன்று சிஎஸ்கே அணியும் கேகேஆர் அணியும் சேப்பாக்கத்தில் விளையாடுகின்றன. இதைத் தொடர்ந்து சென்னை அணி ஏப்ரல் 14 அன்று மும்பை அணியுடன் வான்கடேவில் மோதுகிறது. மேலும் ஏப்ரல் மாதத்தில் 19, 23, 28 ஆகிய தேதிகளிலும், மே மாதத்தில் 1,5,10,12,18 ஆகிய தேதிகளிலும் விளையாடுகிறது.

இதில் சென்னை சேப்பாக்கத்தில் ஏப்ரல் 8, 23, 28 மற்றும் மே 1, 12 ஆகிய தேதிகளில் விளையாடுகிறது.

2-ம் கட்ட அட்டவணையில் சிஎஸ்கேவின் ஆட்டங்கள்

ஏப்ரல் 08: சிஎஸ்கே vs கேகேஆர்

ஏப்ரல் 14: சிஎஸ்கே vs மும்பை

ஏப்ரல் 19: சிஎஸ்கே vs லக்னௌ

ஏப்ரல் 23: சிஎஸ்கே vs லக்னௌ

ஏப்ரல் 28: சிஎஸ்கே vs சன்ரைசர்ஸ்

மே 1: சிஎஸ்கே vs பஞ்சாப்

மே 5: சிஎஸ்கே vs பஞ்சாப்

மே 10: சிஎஸ்கே vs குஜராத்

மே 12: சிஎஸ்கே vs ராஜஸ்தான்

மே 18: சிஎஸ்கே vs ஆர்சிபி

மே 19 அன்று லீக் சுற்று நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து தகுதிச் சுற்று ஆட்டங்கள் மே 21 முதல் நடைபெற உள்ளது.

அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் முதல் தகுதிச் சுற்று ஆட்டம் மற்றும் எலிமினேட்டர் ஆட்டமும் நடைபெறுகிறது. இரண்டாம் தகுதிச் சுற்று ஆட்டம் மற்றும் இறுதிச் சுற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.

மே 21 - தகுதிச் சுற்று 1 - அஹமதாபாத்

மே 22 - எலிமினேட்டர் - அஹமதாபாத்

மே 24 - தகுதிச் சுற்று 2 - சென்னை

மே 26 - இறுதிச் சுற்று - சென்னை

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in