ஐபிஎல் இறுதிச் சுற்று: மோசமான சாதனையைச் செய்த சன்ரைசர்ஸ்

முன்னதாக, 2017 ஐபிஎல் போட்டியின் இறுதிச் சுற்றில் மும்பை அணி புனேவுக்கு எதிராக 129 ரன்கள் எடுத்திருந்தது.....
சன்ரைசர்ஸ்
சன்ரைசர்ஸ்ANI

ஐபிஎல் போட்டியின் இறுதிச் சுற்றில் குறைவான ரன்களை எடுத்த அணி என்ற மோசமான சாதனையை செய்துள்ளது சன்ரைசர்ஸ் அணி.

ஐபிஎல் போட்டியின் இறுதிச் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. முதல் ஓவரிலேயே அபிஷேக் சர்மா ஸ்டார்க்கின் அட்டகாசமான பந்தில் போல்ட் ஆகி 2 ரன்களில் வெளியேற, அடுத்த ஓவரில் டிராவிஸ் ஹெட் டக் அவுட் ஆனார். இதைத் தொடர்ந்து திரிபாதி 9, நிதிஷ் குமார் ரெட்டி 13, கிளாசன் 16, அப்துல் சமத் 4 ரன்களில் வெளியேறியதால் 90 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது சன்ரைசர்ஸ் அணி. கடைசியில் சன்ரைசர்ஸ் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மார்க்ரம் 20, கேப்டன் கம்மின்ஸ் 24 ரன்கள் எடுத்தார்கள். கேகேஆர் அணியில் ரஸ்ஸல் 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் மற்றும் ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். ஐபிஎல் போட்டியின் இறுதிச் சுற்றில் குறைவான ரன்களை எடுத்த அணி என்கிற பெயரையும் சன்ரைசர்ஸ் எடுத்தது.

முன்னதாக, 2017 ஐபிஎல் போட்டியின் இறுதிச் சுற்றில் மும்பை அணி புனேவுக்கு எதிராக 129 ரன்கள் எடுத்ததே, ஐபிஎல் போட்டியின் இறுதிச் சுற்றில் எடுக்கப்பட்ட குறைவான ரன்களாக இருந்தது.

2013 ஐபிஎல் போட்டியின் இறுதிச் சுற்றில் சிஎஸ்கே அணி 125 ரன்கள் எடுத்ததே, 2-வது இன்னிங்ஸில் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோராக உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in