

இலங்கை வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பதிரனாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ. 18 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது.
இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்காவைப் போல பந்துவீசுவதன் மூலம் பிரபலமானவர் மதீஷா பதிரனா. யார்க்கர் பந்துகளை மிக வேகமாக வீசுவதில் இவர் வல்லவர். ஐபிஎல் 2023-க்கு முன்பு சிஎஸ்கே அணியால் இவர் தேர்வு செய்யப்பட்டார். ஐபிஎல் 2025 மெகா ஏலத்துக்கு முன்பு ரூ. 13 கோடிக்குத் தக்கவைக்கப்பட்டார் பதிரனா.
இருந்தபோதிலும், ஐபிஎல் 2026 ஏலத்துக்கு முன்பு சிஎஸ்கே அணியால் அவர் விடுவிக்கப்பட்டார். ஐபிஎல் ஏலத்துக்கு பதிரனா பதிவு செய்திருந்தார்.
ஏலம் நடைபெறுவதற்கு முந்தைய நாள் இரவு ஐஎல்டி20 போட்டியில் 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிரனாவின் அடிப்படை விலை ரூ. 2 கோடி. தில்லி கேபிடல்ஸ் அணி பதிரனாவுக்கான ஏலத்தைத் தொடக்கி வைத்தது. லக்னௌவும் போட்டியில் இணைந்தது. இவ்விரு அணிகளும் ரூ. 10 கோடியைத் தாண்டியும் பதிரனாவுக்காகப் போராடின. ரூ. 15.8 கோடி வரை லக்னௌ சென்றது. தில்லி போட்டியிலிருந்து விலகியது. ரூ. 16 கோடியுடன் போட்டியில் இணைந்தது கேகேஆர். விரைவாக ரூ. 18 கோடிக்கு ஏலம் சென்றது. ரூ.18 கோடியைத் தொட்டவுடன் லக்னௌ போட்டியிலிருந்து விலகியது. இறுதியாக, மதீஷா பதிரனாவை ரூ. 18 கோடிக்குத் தேர்வு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
IPL Auction: Matheesha Pathirana sold for Rs. 18 Crores to KKR
IPL 2026 | IPL Auction | Matheesha Pathirana | Kolkata Knight Riders |