

ஐபிஎல் 2026 போட்டியில் மொத்தமுள்ள 10 அணிகளில் 7 அணிகளின் தலைமைப் பயிற்சியாளர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.
ஐபிஎல் 2026-க்கு முன்பு டிசம்பர் 16 அன்று அபுதாபியில் மினி ஏலம் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக, ஐபிஎல் அணிகள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை கடந்த சனிக்கிழமை வெளியிட்டன.
கடந்த ஐபிஎல் போட்டிக்குப் பிறகு, வீரர்கள் மாற்றத்தைப்போல நிறைய அணிகளில் பயிற்சியாளர்கள் குழுவும் மாறியிருக்கிறது. சமீபத்திய அறிவிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் தலைமைப் பயிற்சியாளராக குமார் சங்கக்காரா செயல்படுவார் என அந்த அணியின் நிர்வாகம் இன்று அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டது.
10 ஐபிஎல் அணிகளுக்கும் தற்போது தலைமைப் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதில் 7 அணிகளின் தலைமைப் பயிற்சியாளர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். மூன்று அணிகள் மட்டுமே இந்தியர்களைத் தலைமைப் பயிற்சியாளர்களாகக் கொண்டுள்ளது.
ஐபிஎல் அணிகளின் தலைமைப் பயிற்சியாளர்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் - ஸ்டீஃபன் ஃபிளெமிங்
மும்பை இந்தியன்ஸ் - மஹிலா ஜெயவர்தனே
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஆண்டி ஃபிளவர்
பஞ்சாப் கிங்ஸ் - ரிக்கி பாண்டிங்
ராஜஸ்தான் ராயல்ஸ் - குமார் சங்கக்காரா
லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ஜஸ்டின் லேங்கர்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டேனியல் வெட்டோரி
தில்லி கேபிடல்ஸ் - ஹேமங் பதானி
குஜராத் டைடன்ஸ் - ஆஷிஷ் நெஹ்ரா
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அபிஷேக் நாயர்
தலைமைப் பயிற்சியாளர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுடைய குழுவில் உதவிப் பயிற்சியாளர்களாகவும் துணைப் பயிற்சியாளர்களாகவும் இந்தியர்கள் இருக்கிறார்கள்.
உதாரணத்துக்கு, ஜஸ்டின் லேங்கர் தலைமையிலான லக்னௌவின் பயிற்சியாளர்கள் குழுவில் பரத் அருண் வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராக உள்ளார். குமார் சங்கக்காரா தலைமையிலான பயிற்சியாளர்கள் குழுவில் விக்ரம் ராத்தோர் தலைமை துணைப் பயிற்சியாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
கடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோசமாகச் செயல்பட்டதால் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து சந்திரகாந்த் பாட்டில் விலகிக் கொண்டார்.
IPL 2026 | Head Coach | IPL | Kumar Sangakkara | Daniel Vettori | Justin Langer | Ricky Ponting | Stephen Fleming | Mahela Jayawardene | Andy Flower | Ashish Nehra | Hemang Badani | Abhishek Nayar |