ஐபிஎல் 2026 ஏலம்: எந்தெந்த வீரர்கள் பதிவு செய்துள்ளார்கள்? | IPL Auction 2026 |

ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் அதிக தொகைக்குத் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
IPL 2026: Maxwell, Moeen Ali not registered for Mini Auction
ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன்ANI
2 min read

ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 1,355 வீரர்கள் பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2026 போட்டிக்கு முன்பு மினி ஏலம் நடைபெறவிருக்கிறது. இதற்கு முன்னதாக அணி நிர்வாகங்கள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை கடந்த நவம்பர் 15 அன்று சமர்ப்பித்தன.

ஐபிஎல் அணிகளால் விடுவிக்கப்பட்ட வீரர்கள், இந்த மினி ஏலத்தில் பங்கெடுப்பார்கள். இதுதவிர கடந்த ஐபிஎல் போட்டியில் பங்கேற்காத வீரர்கள், புதிய வீரர்கள் எனப் பலர் ஏலத்தில் பங்கெடுக்க பதிவு செய்வார்கள். இதற்கு நவம்பர் 30 கடைசி நாள். மினி ஏலத்தில் மொத்தம் 77 இடங்கள் நிரப்பப்பட வேண்டியிருக்கிறது. இதில் வெளிநாட்டு வீரர்களுக்கான இடம் 31.

ஐபிஎல் மினி ஏலம் டிசம்பர் 16 அன்று அபுதாபியில் நடைபெறுகிறது. இந்நிலையில், ஏலத்துக்குப் பதிவு செய்துள்ள 1,355 வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகங்களிடம் பகிர்ந்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். இந்தப் பட்டியலிலிருந்து ஐபிஎல் அணிகள் தங்களுக்கான விருப்பப் பட்டியலைத் தயார் செய்து ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கும். ஐபிஎல் அணிகள் சமர்ப்பிக்கும் வீரர்கள் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு மினி ஏலத்தில் பங்கெடுக்கும் வீரர்கள் இறுதி செய்யப்படுவார்கள். ஐபிஎல் அணிகள் தங்களுடைய விருப்பப் பட்டியலைச் சமர்ப்பிக்க டிசம்பர் 5 கடைசி நாள்.

மினி ஏலத்துக்குப் பதிவு செய்துள்ள வீரர்களில் 45 வீரர்கள் தங்களுடைய குறைந்தபட்ச ஏலத் தொகையாக தலா ரூ. 2 கோடியை நிர்ணயம் செய்துள்ளார்கள்.

ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன், இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் லியம் லிவிங்ஸ்டன், இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய், இந்திய ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர், இலங்கை நட்சத்திரங்கள் மதீஷா பதிரனா மற்றும் வனிந்து ஹசரங்கா உள்ளிட்டோர் மினி ஏலத்துக்குப் பதிவு செய்துள்ளார்கள். பஞ்சாப் கிங்ஸ் அணியால் விடுவிக்கப்பட்ட கிளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் ஏலத்தில் பங்கெடுக்கப் பதிவு செய்யவில்லை.

சிஎஸ்கே முன்னாள் வீரர்கள் மொயீன் அலி, பாஃப் டு பிளெஸ்ஸி ஆகியோர் பாகிஸ்தான் சூப்பர் லீகில் விளையாடவுள்ளதால், ஐபிஎல் ஏலத்துக்குப் பதிவு செய்யவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் விடுவிக்கப்பட்ட ஆண்ட்ரேல ரஸ்ஸல், ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார்.

ஐபிஎல் மினி ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் அதிகபட்சமாக ரூ. 64.3 கோடி உள்ளது. அந்த அணி 9 வீரர்களை விடுவித்துள்ளதால், மொத்தம் 12 வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. இதில் 6 பேர் வெளிநாட்டு வீரர்களாக இருக்கலாம்.

அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸிடம் ரூ. 43.4 கோடி உள்ளது. இரு அணிகளிடமும் வெளிநாட்டு வீரர்களைத் தேர்வு செய்ய இடம் உள்ளது. சிஎஸ்கே அணி 4 வெளிநாட்டு வீரர்கள் உள்பட மொத்தம் 9 வீரர்களை மினி ஏலத்தில் தேர்வு செய்துகொள்ளலாம்.

ரூ. 2 கோடியை அடிப்படை விலையாக நிர்ணயித்துள்ள வீரர்களின் பட்டியலை ஈஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ வெளியிட்டுள்ளது.

ரவி பிஷ்னாய், வெங்கடேஷ் ஐயர், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஷான் அபாட், ஆஷ்டன் அகார், கூப்பர் கான்லி, ஜேக் ஃபிரேசர் மெக்கர்க், கேமரூன் கிரீன், ஜாஷ் இங்லிஸ், ஸ்டீவ் ஸ்மித், முஸ்தபிஸுர் ரஹ்மான், கஸ் அட்கின்சன், டாம் பாண்டன், டாம் கரன், லியம் டாசன், பென் டக்கெட், டேன் லாரன்ஸ், லியம் லிவிங்ஸ்டன், டைமல் மில்ஸ், ஜேமி ஸ்மித், ஃபின் ஆலென், மைக்கேல் பிரேஸ்வெல், டெவான் கான்வே, ஜேக்கப் டஃபி, மேட் ஹென்ரி, கைல் ஜேமிசன், ஆடம் மில்ன், டேரில் மிட்செல், வில் ஓ ரூர்க், ரச்சின் ரவீந்திரா, ஜெரால்டு கூட்ஸியா, டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, அன்ரிக் நோர்க்கியா, ரைலி ரூசோவ், தப்ரைஸ் ஷம்ஸி, டேவிட் வீஸே, வனிந்து ஹசரங்கா, மதீஷா பதிரனா, மஹீஷ் தீக்‌ஷனா, ஜேசன் ஹோல்டர், ஷை ஹோப், அகீல் ஹொசைன், அல்ஸாரி ஜோசஃப்.

Summary

IPL 2026: Maxwell, Moeen Ali not registered for Mini Auction

IPL 2026 | IPL Mini Auction | IPL Auction 2026 | IPL Mini Auction 2026 | Cameron Green | Glenn Maxwell | Venkatesh Iyer | Ravi Bishnoi |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in