
ஐபிஎல் 2025 மார்ச் 22-ல் கொல்கத்தாவில் தொடங்குகிறது.
முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இறுதி ஆட்டம் மே 25 அன்று நடைபெறுகிறது. இதுவும் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
ஐபிஎல் 2025-ல் மொத்தம் 74 ஆட்டங்கள் 65 நாள்களுக்கு நடைபெறவுள்ளன. மார்ச் 22-ல் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தைத் தொடர்ந்து, மார்ச் 23 அன்று இரு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மார்ச் 23 அன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் ஹைதராபாதில் விளையாடுகின்றன. அன்றைய நாள் இரவு ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் சேப்பாக்கத்தில் விளையாடுகின்றன.
குவாலிஃபையர் 1 மற்றும் எலிமினேட்டர் ஆட்டங்கள் முறையே மே 20, மே 21 ஆகிய நாள்களில் ஹைதராபாதில் நடைபெறுகிறது. குவாலிஃபையர் 2 கொல்கத்தாவில் மே 23 அன்று நடைபெறுகிறது.
ஐபிஎல் ஆட்டங்கள் மொத்தம் 13 மைதானங்களில் நடைபெறுகின்றன. 10 அணிகளுக்கும் தலா ஒரு மைதானம் என மொத்தம் 10 மைதானங்கள் உள்ளன. இதுதவிர ராஜஸ்தான் ராயல்ஸின் இரண்டாவது மைதானமாக குவாஹட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு இரு ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. தில்லியின் இரண்டாவது மைதானமாக விசாகப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கும் இரு ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. தரம்சலா மைதானம் பஞ்சாபின் இரண்டாவது மைதானமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு மூன்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
ராஜஸ்தான் ராயல்ஸ், தில்லி கேபிடல்ஸ், லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் தலா 3 பிற்பகல் ஆட்டங்களில் விளையாடுகின்றன. மற்ற ஏழு அணிகளும் தலா இரு பிற்பகல் ஆட்டங்களில் விளையாடுகின்றன.
முதல் ஆட்டம் - கேகேஆர் vs ஆர்சிபி, கொல்கத்தா - மார்ச் 22
குவாலிஃபையர் 1 - ஹைதராபாத் - மே 20
எலிமினேட்டர் - ஹைதராபாத் - மே 21
குவாலிஃபையர் 2 - கொல்கத்தா - மே 23
இறுதி ஆட்டம் - கொல்கத்தா - மே 25
முழு அட்டவணை: இங்கே க்ளிக் செய்யவும்...