
ஐபிஎல் 2025 பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் டைடன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. நான்காவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய மும்பை இந்தியன்ஸ், லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ், தில்லி கேபிடல்ஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
14 புள்ளிகளுடன் உள்ள மும்பை இந்தியன்ஸுக்கு இரு ஆட்டங்கள் மீதமுள்ளன. (vs தில்லி, பஞ்சாப்)
13 புள்ளுகளுடன் உள்ள தில்லி கேபிடல்ஸுக்கு இரு ஆட்டங்கள் மீதமுள்ளன. (vs மும்பை, பஞ்சாப்)
10 புள்ளிகளுடன் உள்ள லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு மூன்று ஆட்டங்கள் மீதமுள்ளன. (vs சன்ரைசர்ஸ், குஜராத், ஆர்சிபி)
தில்லி கேபிடல்ஸ்
மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக தோல்வியடைந்தால் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழக்கும்.
மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக வென்று பஞ்சாப் கிங்ஸிடம் தோற்றால், மற்ற அணிகளின் முடிவை சார்ந்திருக்கும். மும்பை இந்தியன்ஸை பஞ்சாப் கிங்ஸ் வீழ்த்த வேண்டும். பிறகு, லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஏதேனும் ஓர் ஆட்டத்தில் தோல்வியடைய வேண்டும்.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸை வென்றால் 17 புள்ளிகளை அடைந்து பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும்.
மும்பை இந்தியன்ஸ்
மீதமுள்ள இரு ஆட்டங்களிலும் மும்பை வெற்றி பெற்றால், 18 புள்ளிகளை அடைந்து பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துவிடும்.
மீதமுள்ள இரு ஆட்டங்களில் தில்லி கேபிடல்ஸிடம் தோற்று, பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தினால், 16 புள்ளிகளுடன் மற்ற அணிகளின் முடிவை சார்ந்திருக்க நேரிடும். பஞ்சாப் மற்றும் தில்லி இடையிலான ஆட்டத்தில் தில்லி தோற்க வேண்டும்.
இதுவே தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி, பஞ்சாப் கிங்ஸிடம் தோற்றால் 16 புள்ளிகளில் இருக்கும். ஆனால், பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு அதிகம். காரணம், தில்லியால் 16 புள்ளிகளைப் பெற முடியாது. லக்னௌ 3 ஆட்டங்களில் வென்று 16 புள்ளிகளைப் பெற்றாலும், நெட் ரன் ரேட் அடிப்படையில் மும்பை முன்னணியில் உள்ளது.
மீதமுள்ள இரு ஆட்டங்களிலும் தோல்வியடைந்தால் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழக்கும்.
லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ்
மீதமுள்ள 3 ஆட்டங்களிலும் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் வெற்றி பெற வேண்டும். 16 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், மற்ற முடிவுகளை சார்ந்திருக்க வேண்டியிருக்கும்.
தில்லி, மும்பை இடையிலான ஆட்டத்தில் தில்லி வெற்றி பெற வேண்டும். பிறகு, பஞ்சாபுக்கு எதிராக தில்லி தோற்க வேண்டும். மும்பை இந்தியன்ஸ் இரு ஆட்டங்களிலும் தோற்க வேண்டும். இது நிகழ்ந்தால், 16 புள்ளிகளுடன் லக்னௌவுக்கு வாய்ப்பு உள்ளது.
மும்பை ஒன்றில் வெற்றி பெற்றாலும், 16 புள்ளிகளைப் பெற்றுவிடும். பிறகு, நெட் ரன் ரேட்டில் மும்பை முன்னணியில் இருப்பதால், லக்னௌவுக்கான வாய்ப்பு குறைந்துவிடும்.
மீதமுள்ள ஆட்டங்களில் ஒன்றில் தோற்றாலும், பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை லக்னௌ இழந்துவிடும்.