
ஐபிஎல் 2025 இறுதிச் சுற்றில் பஞ்சாப் கிங்ஸை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதன்முறையாக கோப்பையை வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. ஐசிசி தலைவர் ஜெய் ஷா மற்றும் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதாரிடம் கொடுத்தார்கள்.
கோப்பை வென்ற ஆர்சிபி ரூ. 20 கோடியையும் பஞ்சாப் கிங்ஸ் ரூ. 12.5 கோடியையும் பரிசுத் தொகையாகப் பெற்றன.
பரிசளிப்பு விழாவில் முழு விருதுப் பட்டியலும் வெளியாகியுள்ளது.
இறுதிச் சுற்று ஆட்ட நாயகன் - கிருனாள் பாண்டியா
தொடர் நாயகன் விருது - சூர்யகுமார் யாதவ்
ஆரஞ்ச் தொப்பி - சாய் சுதர்சன் (759 ரன்கள்)
பர்பிள் தொப்பி - பிரசித் கிருஷ்ணா (25 விக்கெட்டுகள்)
அதிக சிக்ஸர்கள் - நிகோலஸ் பூரன் (40 சிக்ஸர்கள்)
அதிக பவுண்டரிகள் - சாய் சுதர்சன் (88 பவுண்டரிகள்)
அதிக டாட் பந்துகள் - முஹமது சிராஜ்
சிறந்த கேட்ச் - கமிந்து மெண்டிஸ்
ஃபேர்பிளே விருது - சென்னை சூப்பர் கிங்ஸ்
சிறந்த மைதானம் - தில்லி