மும்பை கேப்டன் தொடர்பான கேள்விகளைத் தவிர்த்த பாண்டியா, பௌச்சர்

5 முறை ஐபிஎல் கோப்பைகளைப் பெற்று தந்த ரோஹித் சர்மா இனி ஒரு வீரராக மட்டுமே செயல்படுவார்.
மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ்@MumbaiIndians

மும்பை அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நீக்கப்பட்டது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளை மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பௌச்சர் மற்றும் கேப்டன் பாண்டியா ஆகியோர் தவிர்த்தனர்.

ஐபிஎல் போட்டி மார்ச் 22 அன்று தொடங்குகிறது. மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் குஜராத் அணியுடன் மார்ச் 24-ல் விளையாடுகிறது. இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பாண்டியா செயல்படுவார் என அந்த அணி நிர்வாகம் அறிவித்தது. எனவே, 5 முறை ஐபிஎல் கோப்பைகளைப் பெற்று தந்த ரோஹித் சர்மா இனி ஒரு வீரராக மட்டுமே செயல்படுவார்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளர் பௌச்சர் மற்றும் கேப்டன் பாண்டியா ஆகிய இருவரும் மும்பை அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நீக்கப்பட்டது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளை முற்றிலும் தவித்தனர்.

செய்தியாளர் ஒருவர் பாண்டியாவிடம், “கேப்டன் பதவியை தேர்வு செய்வதில் உங்களுக்கும், ரோஹித்திற்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாகக் கூறப்படுகிறது. அது உண்மையா?” என கேட்க அந்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்தார் பாண்டியா.

மேலும் தலைமைப் பயிற்சியாளர் பௌச்சரிடம், “மும்பை அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நீக்கப்பட்டது ஏன்?” என்ற கேள்வியை எழுப்ப, எந்த பதிலும் கூறாமல் சற்று நேரம் அமைதியாக இருந்தார் பௌச்சர். இதைத் தொடர்ந்து மற்ற செய்தியாளர்கள் அடுத்தடுத்த கேள்விகளை கேட்க ஆரம்பித்தனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in