டி20 உலகக் கோப்பை: வங்கதேச அணி அறிவிப்பு

சமீபத்தில், காயத்தால் பாதிக்கப்பட்ட டஸ்கின் அஹமது துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வங்கதேச அணி அறிவிப்பு
வங்கதேச அணி அறிவிப்புANI

டி20 உலகக் கோப்பைக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை ஜூன் 1 முதல் 29 வரை மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

நஜ்முல் ஷான்டோ தலைமையிலான அணியில் அனுபவமிக்க ஷகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா, லிட்டன் தாஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

2007 டி20 உலகக் கோப்பை முதல் அனைத்து டி20 உலகக் கோப்பையிலும் விளையாடி உள்ளார் ஷகிப் அல் ஹசன்.

சமீபத்தில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் காயத்தால் பாதிக்கப்பட்ட டஸ்கின் அஹமது துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்தொடரில் அவர் தொடர் நாயகன் விருதை பெற்றார்.

டி20 உலகக் கோப்பைக்கான வங்கதேச அணி: நஜ்முல் ஷான்டோ (கே), டஸ்கின் அஹமது (து.கே.), தன்ஸித் ஹசன், லிட்டன் தாஸ், சௌம்யா சர்கார், டெளஹித் ஹிருதாய், மஹ்முதுல்லா, ஜாகர் அலி, ஷகிப் அல் ஹசன், மெஹதி ஹசன், தன்வீர் இஸ்லாம், ரிஷாத் ஹொசைன், ஷொரிஃபுல் இஸ்லாம், முஸ்தஃபிஸுர் ரஹ்மான், தன்ஸிம் ஹசன்.

மாற்று வீரர்கள்: அஃபிஃப் ஹொசைன், ஹசன் மஹ்முத்

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in