ஐபிஎல்: லக்னௌ வீரர் ஷிவம் மாவி விலகல்!

ஐபிஎல் ஏலத்தில் ஷிவம் மாவி ரூ. 6.40 கோடிக்கு லக்னௌ அணியால் தேர்வு செய்யப்பட்டார்.
ஐபிஎல்: லக்னௌ வீரர் ஷிவம் மாவி விலகல்!
ANI

காயம் காரணமாக லக்னௌ வீரர் ஷிவம் மாவி ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

ஐபிஎல் ஏலத்தில் மாவி ரூ. 6.40 கோடிக்கு லக்னௌ அணியால் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் காயம் காரணமாக அவர் ஐபிஎல் 2024 போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

2018 முதல் ஐபிஎல்-லில் விளையாடி வரும் மாவி, இதுவரை 32 ஆட்டங்களில் பங்கேற்று 30 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணிக்காக 6 டி20 ஆட்டங்களில் விளையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் பருவத்தில் அவர் ஒரு ஆட்டத்தில் கூட விளையாடவில்லை. இந்நிலையில் அவர் விலகியதைத் தொடர்ந்து அவருக்கு பதில் மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

லக்னௌ அணி இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, ஒரு தோல்வி என 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. தனது அடுத்த ஆட்டத்தில் லக்னௌ அணி ஏப்ரல் 7 அன்று குஜராத் அணியுடன் விளையாடுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in