ஐபிஎல்: சிஎஸ்கே வீரர் கான்வே விலகல்; புதிய வீரர் தேர்வு!

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் கிளீசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சிஎஸ்கே வீரர் கான்வே விலகல்
சிஎஸ்கே வீரர் கான்வே விலகல்
1 min read

ஐபிஎல் போட்டியிலிருந்து காயம் காரணமாக சிஎஸ்கே வீரர் கான்வே விலகியுள்ளார்.

பிப்ரவரி மாதத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 ஆட்டத்தில் கான்வே பந்தைப் பிடிக்க முயற்சி செய்தபோது, அவரது இடக்கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது.

இதனால் அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும், காயத்திலிருந்து குணமடைய 8 வாரங்கள் வரை ஆகலாம் என்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து அவர் நடப்பு ஐபிஎல்-லில் மே மாதம் வரை விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஐபிஎல் போட்டியிலிருந்து அவர் முழுவதுமாக விலகியுள்ளார்.

கான்வேவுக்குப் பதிலாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் கிளீசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணிக்காக 6 டி20 ஆட்டங்களில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிஎஸ்கேவில் விளையாடும் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிஸுர், மே 1-க்குப் பிறகு சொந்த நாட்டுக்குத் திரும்புவதால் மாற்று ஏற்பாடாக கிளீசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை ஐபிஎல் போட்டியில் விளையாடாத ரிச்சர்ட் கிளீசன் - ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், இங்கிலாந்து போன்ற நாடுகளில், டி20 லீக் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 90 டி20 ஆட்டங்களில் விளையாடி 101 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in