3.2 ஓவர்கள், 0 ரன், 7 விக்கெட்டுகள்: இந்தோனேஷிய வீராங்கனை உலக சாதனை

தனது அறிமுக ஆட்டத்தில், 7 வீராங்கனைகளை டக் அவுட் செய்தார் ரொமாலியா.
இந்தோனேஷிய வீராங்கனை உலக சாதனை
இந்தோனேஷிய வீராங்கனை உலக சாதனை@cricket_ina

சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் ஒரு வீராங்கனையின் சிறந்த பந்துவீச்சு எனும் சாதனையைப் படைத்துள்ளார் ரொமாலியா.

மங்கோலியா - இந்தோனேஷியா மகளிர் அணிகளுக்கு இடையிலான 5-வது டி20 ஆட்டத்தில் இந்தோனேஷிய வீராங்கனை ரொமாலியா 3.2 ஓவர்கள் வீசி ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி, சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் ஒரு வீராங்கனையின் சிறந்த பந்துவீச்சு எனும் சாதனையைப் படைத்துள்ளார்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இது அவரின் அறிமுக ஆட்டமாகும். தனது முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய ரொமாலியா 7 வீராங்கனைகளை டக் அவுட் செய்துள்ளார்.

இந்த ஆட்டத்தில் 151 ரன்கள் சேர்த்த இந்தோனேஷிய அணி மங்கோலியாவை 24 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து 127 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக நெதர்லாந்து அணியை சேர்ந்த ஃபிரெடெரிக் 3 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதே உலக சாதனையாக இருந்தது.

இந்நிலையில் ரொமாலியா ரன் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் ஒரு வீராங்கனையின் சிறந்த பந்துவீச்சு எனும் சாதனையைப் படைத்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in