டெஸ்ட் வீரர்களுக்குப் புதிய ஊக்கத்தொகையை அறிவித்த பிசிசிஐ

முதல் தர கிரிக்கெட்டுக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் முக்கியத்துவம் தரும் விதமாக பிசிசிஐயின் சமீபத்திய நடவடிக்கைகள் அமைகின்றன.
டெஸ்ட் வீரர்களுக்குப் புதிய ஊக்கத்தொகையை அறிவித்த பிசிசிஐ
ANI

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் தரும் விதத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம்பெறும் வீரர்களுக்கு ஊக்கத் தொகையை அறிவித்துள்ளது பிசிசிஐ.

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ள புதிய ஊக்கத் தொகை விவரங்கள்:

ஒரு பருவத்தில் 50% டெஸ்டுகளுக்குக் குறைவாக விளையாடினால் ஒரு டெஸ்டுக்கான ஒரு வீரரின் ஊக்கத் தொகை - ரூ. 15 லட்சம்

ஒரு பருவத்தில் 50% கூடுதலாக ஆனால் 75% டெஸ்டுகளுக்குக் குறைவாக விளையாடினால் ஒரு டெஸ்டுக்கான ஒரு வீரரின் ஊக்கத் தொகை - ரூ. 30 லட்சம்

ஒரு பருவத்தில்75% டெஸ்டுகளுக்கு அதிகமான விளையாடினால் ஒரு டெஸ்டுக்கான ஒரு வீரரின் ஊக்கத் தொகை - ரூ. 45 லட்சம்

2022-23 பருவத்திலிருந்து இந்த ஊக்கத் தொகை கணக்கிடப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன்படி அந்தப் பருவத்தில் இந்தியா விளையாடிய 9 டெஸ்டுகளில் 7-ல் இடம்பெற்ற புஜாரா ஒரு டெஸ்டுக்கு ரூ. 45 லட்சம் கூடுதலாகப் பெறுவார். இதுமட்டுமல்லாமல் ஒரு டெஸ்டுக்கான ஊதியமான ரூ. 15 லட்சத்தையும் அவர் பெறுவார். இதன்படி இதற்கு முந்தைய ஊதியமான ரூ. 1.05 கோடிக்குப் பதிலாக தற்போது ரூ. 4.2 கோடி பெறுகிறார் புஜாரா.

முதல் தர கிரிக்கெட்டுக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் முக்கியத்துவம் தரும் விதமாக பிசிசிஐயின் சமீபத்திய நடவடிக்கைகள் அமைகின்றன. அதில் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பைப் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in