மீண்டும் ஷமி: இங்கி. டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

சூர்யகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட அணியில் அக்‌ஷர் படேல் துணை கேப்டனாக உள்ளார்.
மீண்டும் ஷமி: இங்கி. டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
ANI
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் முஹமது ஷமி சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. டி20 தொடர் ஜனவரி 22 அன்று கொல்கத்தாவில் தொடங்குகிறது.

டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. காயம் காரணமாக 2023 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணிக்காக எந்தவொரு போட்டியிலும் விளையாடாத முஹமது ஷமி, தற்போது அணிக்குத் திரும்பியுள்ளார்.

சூர்யகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட அணியில் அக்‌ஷர் படேல் துணை கேப்டனாக உள்ளார். பிஜிடி தொடரில் கலக்கிய நிதிஷ் குமார் ரெட்டி அணியில் இடம்பிடித்துள்ளார். ரிஷப் பந்துக்கு அணியில் இடமில்லை.

இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி

  1. சூர்யகுமார் யாதவ் (கேப்டன்)

  2. சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்)

  3. அபிஷேக் சர்மா

  4. திலக் வர்மா

  5. ஹார்திக் பாண்டியா

  6. ரிங்கு சிங்

  7. நிதிஷ் குமார் ரெட்டி

  8. அக்‌ஷர் படேல் (துணை கேப்டன்)

  9. ஹர்ஷித் ராணா

  10. அர்ஷ்தீப் சிங்

  11. முஹமது ஷமி

  12. வருண் சக்ரவர்த்தி

  13. ரவி பிஸ்னாய்

  14. வாஷிங்டன் சுந்தர்

  15. துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்)

இந்தத் தொடருக்கான இங்கிலாந்து அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

  1. ஜாஸ் பட்லர் (கேப்டன்),

  2. ரெஹான் அஹமது

  3. ஜோஃப்ரா ஆர்ச்சர்

  4. கஸ் அட்கின்சன்

  5. ஜேகப் பெத்தல்

  6. ஹாரி புரூக்

  7. பிரைடன் கார்ஸ்

  8. பென் டக்கெட்

  9. ஜேமி ஓவர்டன்

  10. ஜேமி ஸ்மித்

  11. லியம் லிவிங்ஸ்டன்

  12. அடில் ரஷித்

  13. சகிப் மஹ்மூத்

  14. பில் சால்ட்

  15. மார்க் வுட்

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in