டபிள்யுடிசி இறுதிச் சுற்று: இந்தியாவுக்கு வாய்ப்பிருக்கா? இல்லையா?

தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா இடையே கடும் போட்டி.
டபிள்யுடிசி இறுதிச் சுற்று: இந்தியாவுக்கு வாய்ப்பிருக்கா? இல்லையா?
ANI
1 min read

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இறுதிச் சுற்றுக்கு நுழையப் போவது யார் என்ற கேள்வி சுவாரஸ்யமாகியுள்ளது.

அடிலெய்ட் டெஸ்டில் இந்தியா தோற்றதும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்கா கைப்பற்றியதும் இந்தியா இறுதிச் சுற்றுக்குள் நுழைவதைச் சவாலாக்கியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 63.33% உடன் தென்னாப்பிரிக்கா முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 60.71% மற்றும் இந்திய அணி 57.29% உடன் அடுத்த இரு இடங்களில் உள்ளன.

இந்திய அணிக்கு பிஜிடி தொடரில் இன்னும் மூன்று டெஸ்டுகள் உள்ளன. இறுதிச் சுற்றுக்குள் நுழைவதை இந்தியா உறுதி செய்ய மீதமுள்ள மூன்று டெஸ்டுகளில் இரு வெற்றிகள் மற்றும் ஒரு டிரா தேவை. இதன்மூலம் 60.53% பெறும் இந்திய அணி, புள்ளிகள் பட்டியலில் குறைந்தபட்சம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கலாம்.

ஆஸ்திரேலிய அணி பிஜிடி தொடருக்குப் பிறகு இலங்கையுடன் இரு டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் 2-0 என ஆஸ்திரேலியா வெற்றி பெற்றாலும், 57.02% உடன் தென்னாப்பிரிக்கா, இந்தியாவுக்கு அடுத்து மூன்றாவது இடத்துக்கு ஆஸ்திரேலியா பின்தங்கிவிடும்.

ஒருவேளை பிஜிடி தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வென்றால், இறுதியில் 58.77% என்ற நிலையை அடையும். அப்போது ஆஸ்திரேலிய அணி இலங்கையை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தினாலும் இந்தியாவை முந்த முடியாது.

ஒருவேளை பிஜிடி தொடரில் இந்தியா 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தால், இறுதியில் 53.51% என்ற நிலையை அடையும். இந்த நிலையிலும் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற பாகிஸ்தானுக்கு எதிரான இரு டெஸ்டுகளிலும் தென்னாப்பிரிக்கா தோல்வியடைய வேண்டும். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா குறைந்தபட்சம் ஒரு டிரா செய்ய வேண்டும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in