இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி

தீப்தி சர்மா
தீப்தி சர்மா@icc
1 min read

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற டெஸ்டில் இந்திய அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது-.

டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து 428 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்தோ முதல் இன்னிங்ஸில் 136 ரன்களுக்குச் சுருண்டு ஃபாலோ ஆனது. எனினும் இந்திய அணி மீண்டும் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 479 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

முதல் இன்னிங்ஸைப் போலவே 2-வது இன்னிங்ஸிலும் இங்கிலாந்து அணியின் பேட்டர்கள் யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. 27.3 ஓவர்களில் 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளும் வீழ்ந்தன. தீப்தி சர்மா 4 விக்கெட்டுகளையும், பூஜா வஸ்த்ரகர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 347 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி, ஒரு டெஸ்ட் ஆட்டம் கொண்ட தொடரையும் வென்றது. இரு இன்னிங்ஸிலும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு முதல் இன்னிங்ஸில் அரை சதமும் எடுத்த தீப்தி சர்மா, சிறந்த வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டார். 

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in