டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு: சாம்சனுக்கு வாய்ப்பு

அஸ்வின், தினேஷ் கார்த்திக் என எந்த ஒரு தமிழ்நாட்டு வீரருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்புANI

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை ஜூன் 1 முதல் 29 வரை மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஜெயிஸ்வால், ரிஷப் பந்த் ஆகிய பேட்டர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஆல் ரவுண்டர்களில் துபே, பாண்டியா, அக்‌ஷர் படேல், ஜடேஜா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அனைவரும் எதிர்பார்த்தப்படி சாம்சனுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ், சஹால், அர்ஷ்தீப் சிங், பும்ரா, சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ராகுலுக்கு அணியில் இடமில்லை. ரிங்கு சிங் மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அஸ்வின், தினேஷ் கார்த்திக், நடராஜன், சாய் சுதர்சன் என எந்த ஒரு தமிழ்நாட்டு வீரருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஜெயிஸ்வால், ரிஷப் பந்த், துபே, பாண்டியா, அக்‌ஷர் படேல், ஜடேஜா, சாம்சன், குல்தீப் யாதவ், சஹால், அர்ஷ்தீப் சிங், பும்ரா, சிராஜ்.

மாற்று வீரர்கள்: ரிங்கு சிங், கலீல் அஹமது, அவேஷ் கான், கில்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in