செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர் அணி முதல்முறையாக தங்கம் வென்றிருந்த நிலையில் மகளிர் அணியும் முதல்முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 193 அணிகள் பங்கேற்ற ஓபன் பிரிவில் இந்திய ஆடவர் அணி தங்கம் வென்றது.
இதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற மகளிர் அணிகளுக்கான கடைசி சுற்றில் இந்திய அணி அஸர்பைஜானை 3.5 - 0.5 என்ற கணக்கில் வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல்முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
இந்திய வீராங்கனைகளான திவ்யா தேஷ்முக், ஹரிகா, வைஷாலி, வந்திகா அகர்வால் மற்றும் தானியா ஆகியோர் முதல் சுற்றில் இருந்தே ஆதிக்கம் செலுத்தினர்.
இந்நிலையில் இவர்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல்முறையாக தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
2022-ல் சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் வெண்கலப் பதக்கத்தை வென்றன.