
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை அணி அசலங்கா தலைமையில் களமிறங்கவுள்ளது.
இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் பங்கேற்பதற்காக இலங்கைக்குச் சென்றுள்ளது.
டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி. இந்நிலையில் ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது.
ஒருநாள் ஆட்டங்கள் அனைத்தும் கொழும்புவிலும் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் அணிக்கு அசலங்கா கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக டிசம்பர் 2023 முதல் இலங்கை அணியின் கேப்டனாக குசால் மெண்டிஸ் செயல்பட்டு வந்தார்.
அசலங்கா தலைமையிலான இலங்கை அணியில் டெஸ்ட் வீரரான நிஷன் மதுஷ்காவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அகிலா தனஞ்செயா, சமிகா கருணாரத்னே ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி
அசலங்கா (கேப்டன்), நிசங்கா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, குசால் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், சமரவிக்ரமா, லியானகே, நிஷன் மதுஷ்கா, வனிந்து ஹசரங்கா, வெல்லாலகே, தீக்ஷனா, பதிரனா, அகிலா தனஞ்செயா, சமிகா கருணாரத்னே, அசிதா ஃபெர்னாண்டோ, தில்ஷன் மதுஷங்கா.