கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட டி20 தொடர்: தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணி

4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 8 முதல் 15 வரை நடைபெறவுள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா
இந்தியா - தென்னாப்பிரிக்காANI

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான டி20 தொடர் வருகிற நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது.

இந்திய அணி 2021-ல் தென்னாப்பிரிக்கா சென்று 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஒருநாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் வென்றது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையே நடக்கவிருந்த டி20 தொடர் கொரோனா காரணத்தால் கைவிடப்பட்டது. இத்தொடர் தனியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வருகிற நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 8 முதல் 15 வரை டர்பன், செஞ்சுரியன் உட்பட 4 வித்தியாசமான மைதானங்களில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in