48 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் களமிறங்கும் இந்திய மகளிர் டெஸ்ட் அணி!

ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது.
48 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் களமிறங்கும் இந்திய அணி!
48 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் களமிறங்கும் இந்திய அணி!ANI

இந்தியா - தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது.

தென்னாப்பிரிக்க மகளிர் அணி மூன்று ஒருநாள், ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் விளையாட வருகிற ஜூன் மாதத்தில் இந்தியா வருகிறது.

மூன்று ஒருநாள் ஆட்டங்கள் பெங்களூருவிலும், ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கத்திலும் நடைபெறவுள்ளது.

முன்னதாக ஜூன் 13 அன்று பயிற்சி ஆட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடருக்கான அட்டவணை

ஜூன் 16 - முதல் ஒருநாள் ஆட்டம், பெங்களூரு

ஜூன் 19 - 2-வது ஒருநாள் ஆட்டம், பெங்களூரு

ஜூன் 23 - 3-வது ஒருநாள் ஆட்டம், பெங்களூரு

ஜூன் 28 - ஜூலை 1 - டெஸ்ட் ஆட்டம், சென்னை

ஜூலை 5 - முதல் டி20 ஆட்டம், சென்னை

ஜூலை 7 - 2-வது டி20 ஆட்டம், சென்னை

ஜூலை 9 - 3-வது டி20 ஆட்டம், சென்னை

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 48 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டெஸ்ட் ஆட்டத்தில் விளையாட உள்ளது. முன்னதாக 1976-ல் இந்திய அணி மே.இ. தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்டில் விளையாடியது. இந்த ஆட்டம் டிரா ஆனது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகள் இதற்கு முன்பு 2 டெஸ்டில் விளையாடின, இரண்டிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in