இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை ஆட்டத்துக்கு பயங்கரவாதிகள் மிரட்டல்

நியூ யார்க் மைதானத்துக்குக் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளதாக நியூ யார்க் மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை ஆட்டத்துக்கு பயங்கரவாதிகள் மிரட்டல்
இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை ஆட்டத்துக்கு பயங்கரவாதிகள் மிரட்டல்ANI

இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை ஆட்டத்துக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் வந்துள்ளதைத் தொடர்ந்து மைதானத்துக்குக் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை ஜூன் 2 முதல் 29 வரை மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளனர். இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஜூன் 9 அன்று நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை ஆட்டத்துக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்த உள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து ஆட்டம் நடைபெறும் நியூ யார்க் மைதானத்துக்குக் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளதாக நியூ யார்க் மாகாண கவர்னர் கேத்தி ஹோச்சுல் தெரிவித்துள்ளார்.

இது போன்ற தீவிரவாத அமைப்புகளின் மிரட்டலை அவ்வப்போது அமெரிக்கா சந்திப்பது வழக்கம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in