சதத்தைத் தவறவிட்ட ஷுப்மன் கில்: இந்தியா 28 ரன்கள் முன்னிலை!

வாஷிங்டன் சுந்தர் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 38 ரன்கள் எடுத்தார்.
சதத்தைத் தவறவிட்ட ஷுப்மன் கில்: இந்தியா 28 ரன்கள் முன்னிலை!
ANI
1 min read

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 263 ரன்களுக்கு ஆட்டமிழந்து 28 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் மும்பையில் நேற்று (நவ.1) தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தரின் சுழலில் சிக்கி 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது நியூசிலாந்து அணி.

டேரில் மிட்செல் 82 , வில் யங் 71 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணியில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து முதல் இன்னின்ஸை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்து 149 ரன்கள் பின்தங்கியிருந்தது.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

கில் மற்றும் ரிஷப் பந்த் கூட்டணி அதிரடியாக விளையாடி நியூசிலாந்து அணிக்கு நெருக்கடி அளித்தனர். இருவரும் அரைசதம் அடிக்க இந்த கூட்டணி 96 ரன்கள் சேர்த்தது.

ரிஷப் பந்த் 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்து இஷ் சோதி பந்தில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் பொறுமையாக விளையாடிய கில் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

முன்னதாக, ஜடேஜா 14 ரன்களிலும், சர்ஃபராஸ் கான் ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறினர். இறுதியில் வாஷிங்டன் சுந்தரின் அதிரடியால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது.

சிறப்பாக பந்துவீசிய அஜாஸ் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 63 ரன்களுக்கு ஆட்டமிழந்து 28 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

வாஷிங்டன் சுந்தர் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 38 ரன்கள் எடுத்தார்.

இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி தேநீர் இடைவேளையில் ஒரு விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்துள்ளது. டாம் லேதம் ஒரு ரன்னில் ஆகாஷ் தீப் பந்தில் ஆட்டமிழந்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in