2-வது டெஸ்ட்: மழையால் முதல் நாள் ஆட்டம் பாதியில் ரத்து!

வங்கதேச அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது.
2-வது டெஸ்ட்: மழையால் முதல் நாள் ஆட்டம் பாதியில் ரத்து!
@BCCI
1 min read

இந்தியா - வங்கதேசம் இடையிலான 2-வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்டுகளிலும் 3 டி20 ஆட்டங்களிலும் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இத்தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் இன்று கான்பூரில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

ஸாகிர் ஹசன் 24 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன் கூட எடுக்காமல் ஆகாஷ் தீப் பந்தில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான ஷாட்மன் இஸ்லாம் நிதானமான விளையாடி 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆகாஷ் தீப் பந்தில் ஆட்டமிழந்தார். முதல் டெஸ்டை போல, இந்த டெஸ்டின் தொடக்கத்திலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ஆகாஷ் தீப். இதனால் 29 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது வங்கதேச அணி.

இதன் பிறகு கேப்டன் ஷாண்டோ மற்றும் மோமினுல் ஹக் கூட்டணி அமைத்தனர். இருவரும் பொறுப்புடன் விளையாடியதால் உணவு இடைவேளையில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்தது வங்கதேச அணி.

இதைத் தொடர்ந்து 2-வது பகுதியின் தொடக்கத்திலேயே ஷாண்டோ, அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். 6 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து ஷாண்டோ வெளியேறினார். மறுமுனையில் மோமினுல் ஹக் நிதானமாக விளையாடி ஆட்டமிழக்காமல் 40 ரன்களைச் சேர்த்தார். இதன் பிறகு ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

முதல் நாள் முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது. மோமினுல் ஹக் 40 ரன்களும், முஷ்பிகுர் ரஹீம் 6 ரன்களும் எடுத்தனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in