2-வது டெஸ்ட்: இந்திய அணி 52 ரன்கள் முன்னிலை!

டெஸ்டில் அதிவேகமாக 50, 100, 150, 200, 250 ரன்களை அடித்து இந்திய அணி உலக சாதனைகளை படைத்தது.
2-வது டெஸ்ட்: இந்திய அணி 52 ரன்கள் முன்னிலை!
1 min read

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் 52 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்துள்ளது.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்டுகளிலும் 3 டி20 ஆட்டங்களிலும் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இத்தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் செப். 27 அன்று கான்பூரில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 233 ரன்கள் எடுத்தது. இதன் பிறகு இந்திய அணி ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடியது.

டெஸ்டில் அதிவேகமாக 50, 100, 150, 200, 250 ரன்களை அடித்து இந்திய அணி இன்று ஒரே நாளில் 5 உலக சாதனைகளை படைத்தது.

34.4 ஓவர்கள் மட்டுமே விளையாடிய இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்துள்ளது. இதன் மூலம் இந்திய அணி 52 ரன்கள் முன்னிலை பெற்றது.

ஜெயிஸ்வால் 72, ராகுல் 68, கோலி 47, கில் 39 ரன்கள் எடுத்தனர். வங்கதேச அணி தரப்பில் மெஹதி ஹசன், ஷகிப் அல் ஹசன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in