வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்டுகளிலும் 3 டி20 ஆட்டங்களிலும் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் சென்னையில் செப். 19 அன்று தொடங்கியது. இதில், இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் செப்டம்பர் 27 அன்று கான்பூரில் தொடங்குகிறது. இந்நிலையில் 2-வது டெஸ்டுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்டுக்கு தேர்வு செய்யப்பட்ட அதே வீரர்கள் தான் 2-வது டெஸ்டுக்கான அணியிலும் இடம்பெற்றுள்ளார்கள்.
2-வது டெஸ்டுக்கான இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெயிஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், சர்ஃபராஸ் கான், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், முஹமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, யஷ் தயால்.