2-வது டெஸ்ட்: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு!

இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை.
2-வது டெஸ்ட்: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு!
ANI
1 min read

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்டுகளிலும் 3 டி20 ஆட்டங்களிலும் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இத்தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் இன்று கான்பூரில் தொடங்கியுள்ளது.

மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வங்கதேச அணியின் கேப்டன் ஷாண்டோ டாஸ் வென்றிருந்தால் பேட்டிங் செய்ய விரும்பியதாக தெரிவித்தார்.

வங்கதேச அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. நஹித் ராணா மற்றும் டஸ்கின் அஹமதுக்கு பதிலாக கலீத் அஹமது மற்றும் தைஜுல் இஸ்லாம் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணி

ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெயிஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முஹமது சிராஜ், ஆகாஷ் தீப்.

வங்கதேச அணி

ஷாட்மன் இஸ்லாம், ஸாகிர் ஹசன், நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), மோமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), மெஹிதி ஹசன் மிராஸ், ஹசன் மஹ்மூத், கலீத் அஹமது, தைஜுல் இஸ்லாம்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in