சேப்பாக்கத்தில் இந்தியா - வங்கதேசம் டெஸ்ட்: திங்கள் முதல் டிக்கெட் விற்பனை!

முதல் டெஸ்ட் செப்டம்பர் 19 அன்று நடைபெறவுள்ளது.
சேப்பாக்கத்தில் இந்தியா - வங்கதேசம் டெஸ்ட்: திங்கள் முதல் டிக்கெட் விற்பனை!
1 min read

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்டுக்கான டிக்கெட் நாளை விற்பனை செய்யப்படுகிறது.

வங்கதேச அணி இந்தியாவில் மூன்று டி20 மற்றும் 2 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அந்த வகையில் இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் செப்டம்பர் 19 அன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை நாளை (செப். 9) காலை 9.45 மணிக்கு தொடங்குகிறது. ரசிகர்கள் இன்ஸைடர் (Insider.in) இணையத்தளம் மூலம் டிக்கெட்டுகளைப் பெறலாம்.

இந்த ஆட்டத்திற்கான டிக்கெட் கட்டணம் - ரூ. 1000, ரூ. 1250, ரூ. 2000, ரூ. 5000, ரூ. 10000, ரூ. 15000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்று வரலாறு படைத்தது வங்கதேச அணி.

இந்தியா - வங்கதேசம் அட்டவணை

முதல் டெஸ்ட், செப்டம்பர் 19, சென்னை

2-வது டெஸ்ட், செப்டம்பர் 27, கான்பூர்

முதல் டி20, அக்டோபர் 6, குவாலியர்

2-வது டி20, அக்டோபர் 9, தில்லி

3-வது டி20, அக்டோபர் 12, ஹைதராபாத்

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in