பசியுடன் காத்திருக்கிறோம்: இந்தியாவுக்கு லயன் சவால்!

கடந்த 10 ஆண்டுகளில் ஆஸி. அணி இந்தியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரையும் வென்றதில்லை.
லயன்
லயன்ANI
1 min read

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி விளையாடவுள்ள 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெற்றி பெற பசியுடன் காத்திருப்பதாக ஆஸி. வீரர் லயன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் கடந்த இரு டெஸ்ட் தொடர்களையும் கோலி, ரஹானே தலைமையிலான இந்திய அணி வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் இந்த ஆண்டு கடைசியில் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்டுகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.

ஆஸ்திரேலிய அணி கடைசியாக 2014-15 பார்டர் - காவஸ்கர் தொடரில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய நான்கு பார்டர் - காவஸ்கர் தொடரிலும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

எனவே, கடந்த 10 ஆண்டுகளில் ஆஸி. அணி இந்தியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரையும் வென்றதில்லை.

இந்நிலையில் வருகிற நவம்பர் மாதத்தில் தொடங்கவுள்ள பார்டர் - காவஸ்கர் தொடர் குறித்து ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

சுழற்பந்து வீச்சாளர் லயன் பேசியதாவது

“இந்தியாவை டெஸ்ட் தொடரில் வென்று 10 ஆண்டுகள் ஆனது. இந்தப் பணி 10 ஆண்டுகளாக முடிவடையாமல் இருப்பதால் சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்த பசியுடன் காத்திருக்கிறோம். இந்தியாவுடன் விளையாடுவது சவால் நிறைந்ததாக இருக்கும், எனவே இந்த தொடரில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஆஸி. அணியை விட தற்போது வித்தியாசமான அணியாக இருக்கிறோம். ஒரு மிகச்சிறந்த ஆஸி. அணியை உருவாக்கும் பயணத்தில் நாங்கள் இருக்கிறோம். அந்த இலக்கை நாங்கள் இன்னும் எட்டவில்லை, இருப்பினும் அந்த வெற்றி பயணத்தில் சரியாக விளையாடி வருகிறோம்” என்றார்.

வேகப்பந்து வீச்சாளரான ஹேஸில்வுட், “எங்கள் அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் டெஸ்ட் தொடரில் இந்தியாவை வீழ்த்தியதில்லை. இதைச் சொல்லவே வியப்பாக உள்ளது. எனவே, இத்தொடரில் நாங்கள் வெற்றி பெற வேண்டும். குறிப்பாக, சொந்த மண்ணில் நடக்கும் அனைத்து தொடர்களிலும் வெற்றி பெற வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in