2026-ல் இங்கிலாந்து செல்லும் இந்திய அணி: அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ | BCCI
2026-ல் இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.
இந்திய அணி தற்போது இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதைத் தொடர்ந்து, அடுத்தாண்டு மீண்டும் இங்கிலாந்துக்குப் பயணம் செய்கிறது இந்திய அணி.
2026-ல் இங்கிலாந்தில் இந்திய அணி விளையாடவுள்ள ஒருநாள், டி20 தொடர்களின் அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. அனைத்து ஆட்டங்களும் ஜூலை மாதம் நடைபெறவுள்ளன.
ஜூலை 1 முதல் 11 வரை 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரும் ஜூலை 14 முதல் 19 வரை 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரும் நடைபெறவுள்ளன.
இரவு 7 மணிக்குத் தொடங்கும் இரண்டாவது டி20 தவிர மற்ற டி20 ஆட்டங்கள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 11 மணிக்குத் தொடங்குகின்றன. முதலிரு ஒருநாள் ஆட்டங்கள் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கும் கடைசி ஒருநாள் ஆட்டம் பிற்பகல் 3.30 மணிக்கும் தொடங்குகின்றன.
அக்டோபர், நவம்பரில் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி இதேபோல 3 ஒருநாள் மற்றும் 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.
India Tour of England | India England | Team India | BCCI | T20 Series | ODI Series | India England Series