
இந்தியா - இலங்கை இடையேயான ஒருநாள், டி20 தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் பங்கேற்பதற்காக இலங்கை செல்கிறது. ஜூலை 26 அன்று தொடங்கி ஆகஸ்ட் 7 வரை பல்லேகலே, கொழும்பு ஆகிய இடங்களில் விளையாடவுள்ளது.
டி20 ஆட்டங்கள் அனைத்தும் பல்லேகலேவிலும், ஒருநாள் ஆட்டங்கள் அனைத்தும் கொழும்புவிலும் நடைபெறவுள்ளது.
சமீபத்தில், இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இந்திய அணி விளையாடும் முதல் தொடர் இது. இதில் கோலி, ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 அட்டவணை
ஜூலை 26, முதல் டி20, பல்லேகலே
ஜூலை 27, 2-வது டி20, பல்லேகலே
ஜூலை 29, 3-வது டி20, பல்லேகலே
ஒருநாள் அட்டவணை
ஆகஸ்ட் 1, முதல் ஒருநாள் ஆட்டம், கொழும்பு
ஆகஸ்ட் 4, 2-வது ஒருநாள் ஆட்டம், கொழும்பு
ஆகஸ்ட் 7, 3-வது ஒருநாள் ஆட்டம், கொழும்பு