டபிள்யுடிசி தரவரிசை: கீழே இறங்கிய இந்தியா

மற்ற அணிகளின் முடிவைச் சாராமல் நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற இந்திய அணி இனி வரும் மூன்று டெஸ்டிலும் வெற்றி பெற்றாக வேண்டும்.
டபிள்யுடிசி தரவரிசை: கீழே இறங்கிய இந்தியா
1 min read

அடிலெய்ட் டெஸ்டில் தோல்வியடைந்ததன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி கீழே இறங்கியுள்ளது.

ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் அடிலெய்டில் பகலிரவு டெஸ்டாக நடைபெற்றது. ஆஸ்திரேலிய அணி இதில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 9-வது வெற்றியைப் பெற்றதன் மூலம், ஆஸ்திரேலிய அணி 57.69-ல் இருந்து 60.71 புள்ளிகள் சதவீதத்தை அடைந்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்திய அணி 61.11 முதல் 57.29 புள்ளிகள் சதவீதத்துக்கு சரிந்து, புள்ளிகள் பட்டியலில் மூன்றாம் இடத்துக்கு இறங்கியுள்ளது. தென்னாப்பிரிக்க அணி 59.26 புள்ளிகள் சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இலங்கைக்கு எதிரான டெஸ்டில் தென்னாப்பிரிக்கா விளையாடி வருகிறது. இதில் இலங்கையை வீழ்த்தினால், ஆஸ்திரேலியாவைப் பின்னுக்குத் தள்ளி, தென்னாப்பிரிக்கா முதலிடத்துக்கு முன்னேறிவிடும்.

பிஜிடி தொடரில் மீதமுள்ள மூன்று டெஸ்டில், ஒன்றில் தோல்வியைச் சந்தித்தாலும், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறுவது சிக்கலாகிவிடும்.

மற்ற அணிகளின் முடிவைச் சாராமல் நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற இந்திய அணி இனி வரும் மூன்று டெஸ்டிலும் வெற்றி பெற்றாக வேண்டும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in