
2036 ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராலிம்பிக்ஸை இந்தியாவில் நடத்த, இந்திய ஒலிம்பிக் சங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பிக்ஸ், 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. 2024 ஒலிம்பிக்ஸ் பாரிஸில் நடைபெற்றது. 2028 ஒலிம்பிக்ஸ் லாஸ் ஏஞ்சல்ஸிலும், 2032 ஒலிம்பிக்ஸ் ஆஸ்திரேலியாவிலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் 2036 ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராலிம்பிக்ஸை இந்தியாவில் நடத்த அனுமதி கோரி, இந்திய ஒலிம்பிக் சங்கம் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திடம் கடந்த அக்டோபர் 1 அன்று முறைப்படி விண்ணப்பித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, “2036 ஒலிம்பிக்ஸ் இந்தியாவில் நடக்கும். இது 140 கோடி இந்தியர்களின் கனவு” என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.