
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 12-வது முறையாக டாஸில் தோற்று இந்தியா மோசமான சாதனையைப் படைத்துள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் துபாயில் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் முஹமது ரிஸ்வான் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்த ஆட்டத்திலும் டாஸில் தோற்றதன் மூலம் இந்தியா மோசமான சாதனையைப் படைத்துள்ளது. 2023 நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் இந்தியா டாஸில் தோற்றது.
இதன்பிறகு, இன்றைய பாகிஸ்தான் ஆட்டம் உள்பட தொடர்ச்சியாக நடைபெற்ற 12 ஒருநாள் ஆட்டங்களிலும் இந்தியா டாஸில் தோற்றுள்ளது. இதில் ரோஹித் சர்மா 9 முறை வழிநடத்தி டாஸில் தோற்றுள்ளார். கேஎல் ராகுல் 3 ஆட்டங்களில் இந்தியாவை வழிநடத்தி அந்த மூன்றிலும் டாஸில் தோற்றுள்ளார்.
இதற்கு முன்பு, 2011 முதல் 2013 வரை நெதர்லாந்து அணி தொடர்ச்சியாக 11 ஒருநாள் ஆட்டங்களில் டாஸில் தோற்றதே சாதனையாக இருந்தது.