நியூசிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு!

ஜஸ்பிரித் பும்ரா துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முஹமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
நியூசிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு!
ANI
1 min read

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து இடையிலான மூன்று டெஸ்டுகள் கொண்ட தொடர் அக். 16 அன்று தொடங்குகிறது. இத்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வங்கதேச டெஸ்ட் தொடரில் இடம்பெற்ற அதே வீரர்கள் தான் இத்தொடருக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். யஷ் தயாலுக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஜஸ்பிரித் பும்ரா துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும், மாற்று வீரர்களாக ஹர்ஷித் ராணா, நிதிஷ் ரெட்டி, மயங்க் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கடைசியாக 2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய முஹமது ஷமி, காயத்தில் இருந்து மீண்டு வந்து பயிற்சியை மேற்கொண்டு வந்தார். இருப்பினும் அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் அக். 16 அன்று பெங்களூரில் தொடங்குகிறது.

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி

ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெயிஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், சர்ஃபராஸ் கான், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், முஹமது சிராஜ், ஆகாஷ் தீப்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in