
வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 297 ரன்கள் குவித்து பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது.
சர்வதேச டி20யில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் - 297/6
ஆடவர் டி20யில் ஓர் ஆட்டத்தில் இந்திய அணி அடித்த அதிக சிக்ஸர்கள் - 22
பவர்பிளேயில் இந்தியா எடுத்த அதிக ரன்கள். இதற்கு முன்பு 2021 டி20 உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்துக்கு எதிராக இந்திய அணி பவர்பிளேயில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்தது - 82/1 (சமன்)
ஆடவர் டி20யில் அதிக பவுண்டரிகள் அடித்து இந்தியா சாதனை. முன்னதாக, 2019-ல் துருக்கிக்கு எதிராக செக் குடியரசும் 2023-ல் ஆந்திரத்துக்கு எதிராக பஞ்சாப் அணியும் 43 பவுண்டரிகள் விளாசியதே சாதனை - 47 பவுண்டரிகள்
சர்வதேச டி20யில் இந்திய அணி விரைவாக 100 ரன்கள் - 7.2 ஓவர்கள்
சர்வதேச டி20யில் இந்திய விரைவாக 200 ரன்கள் - 13.6 ஓவர்கள்
ஆடவர் டி20யில் பவுண்டரிகள் மூலம் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை. இதற்கு முன்பு ஆந்திரத்துக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி பவுண்டரிகள் மூலம் 216 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது - 232 ரன்கள்
ஆடவர் டி20யில் ஓர் ஆட்டத்தில் அதிக ஓவர்களில் தலா 10 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்து இந்தியா சாதனை - 18 ஓவர்களில் 10-க்கும் மேற்பட்ட ரன்கள் விளாசல்
சர்வதேச ஆடவர் டி20யில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார் - 1
சர்வதேச டி20யில் அதிக முறை 200-க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து இந்தியா சாதனை - 37 முறை
சர்வதேச டி20யில் அதிக ரன்கள்
நேபாளம் - 314/3 (எதிரணி: மங்கோலியா)
இந்தியா - 297/6 (இன்று)
ஆப்கானிஸ்தான் 278/3 (எதிரணி: அயர்லாந்து)
சர்வதேச டி20யில் இந்தியாவுக்காக அதிவேக சதம்
35 பந்துகள் - ரோஹித் சர்மா
40 பந்துகள் - சஞ்சு சாம்சன் (இன்று)
45 பந்துகள் - சூர்யகுமார் யாதவ்