
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதிச்சுற்றில் சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி.
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி கடந்த நவ.11 அன்று பிஹாரில் தொடங்கியது. இதில் இந்தியா, சீனா, மலேசியா, தாய்லாந்து, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய 6 அணிகள் பங்கேற்றன.
லீக் சுற்றில் 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, அரையிறுதியில் ஜப்பானை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இறுதிச்சுற்றில் சீனாவை எதிர்கொண்ட இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை தீபிகா ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் கோல் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.
ஏற்கெனவே இந்திய அணி 2016, 2023 ஆகிய ஆண்டுகளில் மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற நிலையில் இந்தாண்டு 3-வது சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. மேலும், தொடச்சியாக 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.