சென்னை டெஸ்டுக்கான தினசரி டிக்கெட் விற்பனை குறித்த புதிய அறிவிப்பை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது.
வங்கதேச அணி இந்தியாவில் மூன்று டி20 மற்றும் 2 டெஸ்ட் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் செப்டம்பர் 19 அன்று சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இந்த டெஸ்டுக்கான டிக்கெட் விற்பனை செப். 9 அன்று காலை 9.45 மணிக்கு தொடங்கியது. ரசிகர்கள் இன்ஸைடர் (Insider.in) இணையத்தளம் மூலம் டிக்கெட்டுகளைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்த டெஸ்டுக்கான தினசரி டிக்கெட் விற்பனை குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
ரூ. 200, ரூ. 400, ரூ. 1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ள டிக்கெட்டுகளை ரசிகர்கள் அந்தந்த நாள்களில் காலை 7 மணி முதல் நேரடியாக மைதானத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.