ஆஸ்திரேலிய ஏ தொடர்: ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்திய ஏ அணி அறிவிப்பு! | India A |

தமிழக வீரர்கள் என் ஜெகதீசன், சாய் சுதர்சன் ஆகியோருக்கு வாய்ப்பு.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
2 min read

ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான இரு நான்கு நாள் ஆட்டங்களுக்கான இந்திய ஏ அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய ஏ அணி வரும் செப்டம்பர், அக்டோபரில் இந்தியாவுக்குப் பயணம் செய்கிறது. லக்னௌவில் இந்திய ஏ அணிக்கு எதிராக இரு நான்கு நாள் ஆட்டங்கள் முறையே செப்டம்பர் 16 மற்றும் செப்டம்பர் 23-ல் தொடங்கவுள்ளன. கான்பூரில் மூன்று ஒருநாள் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

இதற்கான ஆஸ்திரேலிய ஏ அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய ஏ அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான அணியில் தமிழக வீரர்கள் என் ஜெகதீசன், சாய் சுதர்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். துணை கேப்டனாக விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் நியமிக்கப்பட்டுள்ளார். அபிமன்யு ஈஸ்வரன், தேவ்தத் படிக்கல், ஆயுஷ் பதோனி, தனுஷ் கோடியான், பிரசித் கிருஷ்ணா, கலீல் அஹமது உள்ளிட்டோர் இந்தியா ஏ அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

முதல் ஆட்டத்தில் விளையாடியவர்களில் இருவர் நீக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக கேஎல் ராகுல் மற்றும் முஹமது சிராஜ் சேர்க்கப்படுவார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய ஏ அணி

ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், என் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், துருவ் ஜுரெல் (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஹர்ஷ் துபே, ஆயுஷ் பதோனி, நிதிஷ் குமார் ரெட்டி, தனுஷ் கோடியான், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், கலீல் அஹமது, மனவ் சுதர், யஷ் தாக்குர்.

ஆஸ்திரேலிய அணி 2027 தொடக்கத்தில் இந்தியாவுக்குப் பயணம் செய்து 5 டெஸ்டுகள் கொண்ட பிஜிடி தொடரில் விளையாடுகிறது. இதை மனதில் வைத்து ஆஸ்திரேலிய ஏ அணிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். குறிப்பாக, 2027-ல் ஆஸ்திரேலியாவின் பேட்டர்கள் வரிசையில் மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், ஆஸ்திரேலிய தேர்வுக் குழு இதைக் கவனத்தில் கொண்டுள்ளது.

14 பேர் கொண்ட ஆஸ்திரேலிய ஏ அணியில் சாம் கான்ஸ்டஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்காக விளையாடிய மற்றொரு தொடக்க பேட்டரான நேதன் மெக்ஸ்வீனியும் இதில் இடம்பெற்றுள்ளார்.

பெரியளவில் எதிர்பார்க்கப்பட்ட மார்கஸ் ஹாரிஸ், கேமரூன் பான்கிராஃப்ட், மேட் ரென்ஷா, ஜேசன் சங்கா உள்ளிட்டோர் சேர்க்கப்படவில்லை. 2023-ல் இந்தியாவில் நடைபெற்ற பிஜிடி டெஸ்ட் தொடரில் விளையாடிய டாட் மர்ஃபி ஆஸ்திரேலியா ஏ அணியில் இடம்பெற்றுள்ளார். இலங்கை டெஸ்ட் தொடரில் அறிமுகமான கூப்பர் கான்லியும் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய ஏ அணி

சேவியர் பார்லெட், கூப்பர் கான்லி, ஜேக் எட்வார்ட்ஸ், ஆரோன் ஹார்டி, கேம்பெல் கெல்லாவே, சாம் கான்ஸ்டஸ், நேதன் மெக்ஸ்வீனி, லேன்ஸ் மோரிஸ், டாட் மர்ஃபி, ஃபெர்கஸ் ஓ நீல், ஆலிவர் பீக், ஜாஷ் ஃபிலிப்பி, கோரி ரோக்கிசியோலி, லியம் ஸ்காட்.

BCCI | India A | India A Squad | Australia A Squad | Australia A | Shreyas Iyer | Sai Sudarshan | N Jagadeesan | Dhruv Jurel | KL Rahul | Abhimanyu Easwaran | Sai Sudharsan | Dhruv Jurel | Devdutt Padikkal | Ayush Badoni | Nitish Kumar Reddy | Tanush Kotian| Prasidh Krishna | Khaleel Ahmed | Mohammed Siraj 

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in