
இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொள்ளும் இந்தியா ஏ அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இத்தொடர் ஜூன் 20 அன்று லீட்ஸில் தொடங்குகிறது.
இதற்கு முன்னதாக இந்தியா ஏ இங்கிலாந்துக்குப் பயணம் செய்து இங்கிலாந்து ஏ அணியுடன் இரு முதல்தர கிரிக்கெட்டில் விளையாடுகிறது. அபிமன்யு ஈஸ்வரன் தலைமையில் இதற்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. துணை கேப்டனாக விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் அறிவிக்கப்பட்டுள்ளார்.
18 பேர் கொண்ட அணியில் யஷஸ்வி ஜெயிஸ்வால், ஷார்துல் தாக்குர், கருண் நாயர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளார்கள். இரண்டாவது விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் இடம்பெற்றுள்ளார். ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இரண்டாவது ஆட்டத்துக்கு முன் அணியில் இணைகிறார்கள். இவர்கள் தவிர பெரும் வேகப்பந்துவீச்சாளர்கள் படையே அணியில் இடம்பெற்றுள்ளது.
இந்தியா ஏ:
அபிமன்யு ஈஸ்வரன், யஷஸ்வி ஜெயிஸ்வால், கருண் நாயர், துருவ் ஜுரெல், நிதிஷ் குமார் ரெட்டி, ஷார்துல் தாக்குர், இஷான் கிஷன், மானவ் சுதார், தனுஷ் கோடியான், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் கம்போஜ், கலீல் அஹமது, ருதுராஜ் கெயிக்வாட், சர்ஃபராஸ் கான், துஷார் தேஷ்பாண்டே மற்றும் ஹர்ஷ் துபே.
ரிஷிகேஷ் கனிட்கர் இந்தியா ஏ அணியின் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.