கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் வென்ற இந்தியா!

முகேஷ் குமார் சிறப்பாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் வென்ற இந்தியா!
கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் வென்ற இந்தியா!@ZimCricketv
2 min read

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5-வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா- ஜிம்பாப்வே இடையேயான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் கடைசி ஆட்டம் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெற்றது.

டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ருதுராஜ் கெயிக்வாட், கலீல் அஹமது ஆகியோருக்கு பதிலாக ரியான் பராக், முகேஷ் குமார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

ராஸாவின் முதல் பந்தில் சிக்ஸருடன் தொடங்கிய ஜெயிஸ்வால் அதே ஓவரில் ஆட்டமிழந்தார். 5 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 12 ரன்கள் எடுத்தார் ஜெயிஸ்வால்.

முதல் பந்து நோ- பாலாக அமைய அடுத்த பந்திலும் சிக்ஸர் அடித்த ஜெயிஸ்வால் சர்வதேச டி20-யில் ஒரே பந்தில் 12 ரன்கள் அடித்த முதல் வீரர் எனும் சாதனையை படைத்தார்.

இதன் பிறகு அபிஷேக் சர்மா 14, கில் 13 ரன்களில் அடுத்தடுத்து வெளியேற 5 ஓவர்களில் 40 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி. இதைத் தொடர்ந்து ரியான் பராக் - சாம்சன் கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடினர்.

அதிரடியாக விளையாடிய சாம்சன் அரைசதம் அடித்தார். மெதுவாக விளையாடிய ரியான் பராக் 24 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த ஜோடி 65 ரன்களை சேர்த்தது.

சாம்சன் 4 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 45 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து முஸாராபானி பந்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் துபே அதிரடியாக விளையாடி வேகமாக ரன்களை சேர்த்தார். 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 12 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து துபே வெளியேறினார்.

இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது இந்திய அணி. ரிங்கு சிங் 9 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார். ஜிம்பாப்வே அணி தரப்பில் முஸாராபானி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சிக் காத்திருந்தது. மதவேரே ரன் எதுவும் எடுக்காமலும், பென்னட் 10 ரன்களிலும் முகேஷ் குமார் பந்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதன் பிறகு மருமணி - மய்ரஸ் கூட்டணி அமைத்தனர். இவர்களின் ஆட்டம் ஜிம்பாப்வே அணிக்கு சற்று ஆறுதலாக அமைந்தது. இந்த ஜோடியை வாஷிங்டன் சுந்தர் பிரித்தார். மருமணி 24 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக மயர்ஸும் 32 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து வெளியேற, ராஸா எதிர்பாராத வகையில் ரன் அவுட் ஆனார். கேம்பெல் 4 ரன்களில் துபே பந்தில் வெளியேற மடாண்டே 1 ரன்னில் அபிஷேக் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார்.

இதனால் 16 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்து திணறியது ஜிம்பாப்வே அணி. 4 ஓவர்களில் 69 ரன்கள் தேவைப்பட்டது.

ஃபராஸ் அக்ரம் அதிரடியாக விளையாடி 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 13 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார்.

18.3 ஓவர்களில் 125 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஜிம்பாப்வே அணி. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளையும், துபே 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் 4-1 என்ற கணக்கில் வென்றது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in