ஓய்வு முடிவைத் திரும்பப் பெற்ற இமாத் வாசிம்
ஓய்வு முடிவைத் திரும்பப் பெற்ற இமாத் வாசிம் ANI

ஓய்வு முடிவைத் திரும்பப் பெற்ற இமாத் வாசிம்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
Published on

இமாத் வாசிம் தனது ஓய்வு முடிவைத் திரும்பப் பெற்றார்.

பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டரான இமாத் வாசிம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் அவர் தனது ஓய்வு முடிவைத் திரும்பப் பெறுவதாக நேற்று தனது எக்ஸ் தளத்தில் அறிவித்தார்.

இது குறித்து இமாத் வாசிம், “எனது ஓய்வு முடிவை நான் மறுபரிசீலனை செய்கிறேன். ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக்கோப்பை போட்டியில் விளையாட தயராக உள்ளேன். பிசிபி அதிகாரிகளை சந்தித்ததைத் தொடர்ந்து இதனை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பாகிஸ்தான் அணிக்கே முன்னுரிமை” என்றார்.

இந்நிலையில் அவர் பாகிஸ்தான் அணியில் மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இமாத் வாசிம் 66 டி20 ஆட்டங்களில் விளையாடி 486 ரன்கள் எடுத்து, 65 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in