
நன்றாக கிரிக்கெட் விளையாடினால், சமூக ஊடகங்களில் விளம்பரம் தேவையில்லை என பிரபல கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி தெரிவித்துள்ளார்.
யூரோகிரிப் டயர்ஸின் டிரெட் டாக்ஸ் நிகழ்ச்சியில் எம்எஸ் தோனி கலந்துகொண்டார். இதில் சமூக ஊடகங்கள் குறித்தும் விளம்பரங்கள் குறித்தும் அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
"நான் சமூக ஊடகங்களின் பெரிய ரசிகன் கிடையாது. இதுநாள் வரை நான் நிறைய மேலாளர்களைப் பணிக்கு வைத்துள்ளேன். 2004-ல் நான் விளையாடத் தொடங்கினேன். சற்று தாமதமாகவே ட்விட்டர் (தற்போது எக்ஸ்) பிரபலமடைந்தது. இன்ஸ்டகிராம் இன்னும் கொஞ்சம் காலம் கடந்து வந்தது.
அனைத்து மேலாளர்களும் நாம் கொஞ்சம் விளம்பரம் செய்ய வேண்டும், இதைக் கட்டமைக்கலாம், அதைக் கட்டமைக்கலாம் என்று சொல்வார்கள். அவர்கள் அனைவருக்கும் நான் ஒரே பதிலைத் தான் சொல்வேன். நான் நன்றாக கிரிக்கெட் விளையாடினால், எனக்கு விளம்பரம் தேவைப்படாது" என்றார் எம்எஸ் தோனி.
சமூக ஊடகங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உலகில், அதுகுறித்து பெரிய ஆரவாரம் இல்லாமல் தோனி மிகவும் இயல்பான பதிலை அளித்துள்ளது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.