ஐசிசி விருதுகள் 2024: முழுப் பட்டியல்!

ஸ்மிருதி மந்தனா ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐசிசி விருதுகள் 2024: முழுப் பட்டியல்!
ANI
1 min read

2024-ம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் கடந்த 24 முதல் அறிவிக்கப்பட்டு வந்தது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய அறிவிப்புகள் வெளியாகி வந்தன. ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட்டில் (அனைத்து வகையிலான கிரிகெட் உள்பட) 12 தனி நபர்களுக்கு 2024-ம் ஆண்டுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 5 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2024-ம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் பட்டியல்

  • ஐசிசியின் சிறந்த வீரர் - ஜஸ்பிரித் பும்ரா

  • ஐசிசியின் சிறந்த வீராங்கனை - மீலி கெர்

  • ஐசிசியின் டெஸ்ட் வீரர்: ஜஸ்பிரித் பும்ரா

  • ஐசிசியின் ஒருநாள் வீரர்: அஸ்மதுல்லா ஓமர்ஸாய்

  • ஐசிசியின் ஒருநாள் வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா

  • ஐசிசியின் வளர்ந்து வரும் வீராங்கனை: அனெரி டெர்க்சன்

  • ஐசிசியின் வளர்ந்து வரும் வீரர்: கமிந்து மெண்டிஸ்

  • ஐசிசியின் சர்வதேச டி20 வீரர்: அர்ஷ்தீப் சிங்

  • ஐசிசியின் சர்வதேச டி20 வீராங்கனை: மீலி கெர்

  • ஐசிசியின் அசோசியேட் கிரிக்கெட் வீரர்: கெர்ஹார்ட் எராஸ்மஸ்

  • ஐசிசியின் அசோசியேட் கிரிக்கெட் வீராங்கனை: ஈஷா ஓஸா

  • ஐசிசியின் சிறந்த நடுவர்: ரிச்சர்ட் இல்லிங்வொர்த்

ஐசிசியின் சர்வதேச டி20 அணி

ரோஹித் சர்மா (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஃபில் சால்ட், பாபர் ஆஸம், நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), சிகந்தர் ராஸா, ஹார்திக் பாண்டியா, ரஷித் கான், வனிந்து ஹசரங்கா, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.

ஐசிசியின் சர்வதேச மகளிர் டி20 அணி

லாரா வோல்வார்ட் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, சமரி அத்தபத்து, ஹீலி மேத்யூஸ், நேட் சிவர் பிரன்ட், மெலி கெர், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), மரிஸான் கப், ஆர்லா பிரென்டெர்கஸ்ட், தீப்தி ஷர்மா, சதியா இக்பால்.

ஐசிசியின் டெஸ்ட் அணி

யஷஸ்வி ஜெயிஸ்வால், பென் டக்கெட், கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஹாரி புரூக், கமிந்து மெண்டிஸ், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மேட் ஹென்ரி, ஜஸ்பிரித் பும்ரா.

ஐசிசியின் ஒருநாள் அணி

சைம் அயூப், ரஹமனுல்லா குர்பாஸ், பதும் நிசங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சாரித் அசலங்கா (கேப்டன்), ஷெர்ஃபோன் ரூதர்ஃபோர்ட், அஸ்மதுல்லா ஓமர்ஸாய், வனிந்து ஹசரங்கா, ஷஹீன் ஷா அஃப்ரிடி, ஹாரிஸ் ராஃப், ஏஎம் கஸன்ஃபர்.

ஐசிசியின் மகளிர் ஒருநாள் அணி

ஸ்மிருதி மந்தனா, லாரா வோல்வார்ட் (கேப்டன்), சமரி அத்தபத்து, ஹீலி மேத்யூஸ், மரிஸான் கப், ஆஷ்லே கார்ட்னர், அனபெல் சதர்லாண்ட், எமி ஜோன்ஸ் (விக்கெட் கீப்பர்), தீப்தி ஷர்மா, சோஃபி எக்லெஸ்டோன், கேட் கிராஸ்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in