சூர்யகுமார் யாதவ் கேட்சால் சர்ச்சை: ஐசிசி வெளியிட்ட காணொளி

இந்த உலகக் கோப்பையின் சிறந்த கேட்ச் என்றே இதனை கூறலாம்.
சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்@icc

சூர்யகுமார் யாதவின் சர்ச்சைக்குரிய கேட்ச் சரியானது தான் என்று ஐசிசி வெளியிட்டுள்ள காணொளி மூலம் தெரிவந்துள்ளது.

பார்படாஸில் கடந்த ஜூன் 29 அன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி.

கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்தில் மில்லர் சிக்ஸரை நோக்கி அடிக்க, பவுண்டரி எல்லையில் சிறப்பாகச் செயல்பட்ட சூர்யகுமார் யாதவ் அதனை கேட்சாக மாற்றினார். இந்த உலகக் கோப்பையின் சிறந்த கேட்ச் என்றே அதை கூறலாம்.

ஒரு வேளை அந்த பந்தில் சிக்ஸர் சென்றிருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கலாம்.

இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் கேட்சால் மிகப்பெரிய சர்ச்சையைல் கிளப்பியது. இந்நிலையில் ஐசிசி வெளியிட்டுள்ள காணொளி மூலம் அந்த கேட்ச் சரியானது தான் என்று தெரிவந்துள்ளது.

இதில் சூர்யாகுமார் யாதவ் கேட்ச் பிடிக்கும் போது பவுண்டரி எல்லைக்கு உள்ளே இருக்கிறார், அடுத்ததாக சர்ச்சைக்குரிய அந்த பவுண்டரி எல்லைக் கோட்டை நெருங்கும் போது அவரது காலணிக்கும் பவுண்டரி எல்லைக்கும் இடையே புற்கள் பச்சையாகத் தெரிகின்றது. அவர் பவுண்டரி எல்லைக்கு வெளியே தாவ முயற்சித்து மீண்டும் மைதானத்துக்குள் வந்த போது அவரது காலுக்கும் பவுண்டரி எல்லைக்கும் இடையே உள்ள தூரம் அதிகமாகவே உள்ளது.

எனவே, இதன் மூலம் சூர்யகுமார் யாதவின் சர்ச்சைக்குரிய கேட்ச் சரியானது தான் என்பது தெரிகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in