இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இயான் பெல் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து - இலங்கை இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 21 அன்று தொடங்குகிறது.
இத்தொடரில் இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து வீரர் இயான் பெல் செயல்படுவார் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 16 முதல் தனது பணியை அவர் தொடங்குவார் என்றும் இத்தொடர் முடியும் வரை அவர் பேட்டிங் பயிற்சியாளராக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்தொடர் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளதால், இங்கிலாந்தின் ஆடுகளங்கள் குறித்து நன்கு அறிந்த ஒருத்தரை பேட்டிங் பயிற்சியாளராக தேர்வு செய்துள்ளோம். இயான் பெல்லுக்கு நிறைய அனுபவம் உள்ளது, நிச்சயம் அது இலங்கை வீரர்களுக்கு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.