பாலின சர்ச்சையில் சிக்கிய இமானே காலிஃப் தங்கம் வென்று அசத்தல்!

"மற்ற பெண்களைப் போல நானும் ஒரு பெண் தான். நான் பெண்ணாகவே பிறந்தேன், பெண்ணாகவே வாழ்கிறேன், பெண்ணாகவே போட்டியிடேன்".
பாலின சர்ச்சையில் சிக்கிய இமானே காலிஃப் தங்கம் வென்று அசத்தல்!
பாலின சர்ச்சையில் சிக்கிய இமானே காலிஃப் தங்கம் வென்று அசத்தல்!@imane_khelif_10
1 min read

ஒலிம்பிக்ஸ் மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ பிரிவில் பாலின சர்ச்சையில் சிக்கிய இமானே காலிஃப் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கியது.

இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இதில், மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இத்தாலியை சேர்ந்த ஏஞ்சலா கரினி மற்றும் அல்ஜீரியாவை சேர்ந்த இமானே காலிஃப் ஆகியோர் மோதினர்.

இந்த ஆட்டம் 46 நொடிகள் மட்டுமே நீடித்த நிலையில், இமானே காலிஃபின் முரட்டுத்தனமான ஒரு குத்துக்கு பிறகு கரினி வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து கரினியின் மூக்கில் ரத்தம் வந்த நிலையில் வலியை பொறுத்துக்கொள்ள முடியாமல் இனி விளையாட முடியாது என்று நடுவரிடம் கூறிவிட்டார்.

இதனால் காலிஃப் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதன் பிறகு இத்தாலியை சேர்ந்த ஏஞ்சலா கரினியை எதிர்த்து விளையாடியது ஒரு பயாலஜிக்கல் ஆணா? என்ற சந்தேகம் எழுந்தது.

இது குறித்து, “பாஸ்போர்ட்டில் ஒருவருக்கு என்ன பாலினம் குறிப்பிடப்பட்டுள்ளதோ அதன் அடிப்படையில் தான் வீரர்களின் பாலினம் அடையாளம் காணப்படும்” என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விளக்கம் அளித்தது.

இந்நிலையில் இமானே காலிஃப் தொடர்ந்து விளையாட அனுமதிக்கப்பட்டார். அடித்தடுத்து வெற்றிகளைப் பெற்ற அவர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இறுதிச் சுற்றில் சீனாவின் யெங் லியூவை வீழ்த்தி இமானே காலிஃப் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இமானே காலிஃப் ஒலிம்பிக்ஸில் பங்கேற்றது மிகப்பெரிய பேசுபொருளாக மாறிய நிலையில், அனைத்து தடைகளையும் தாண்டி சாதனை படைத்துள்ளார்.

முதல்முறையாக ஒலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வென்ற இமானே காலிஃப் ஆட்டம் முடிந்தப்பிறகு, “இப்போட்டியில் கலந்துகொள்ள எனக்கு அனைத்து தகுதியும் உண்டு. மற்ற பெண்களைப் போல நானும் ஒரு பெண் தான். நான் பெண்ணாகவே பிறந்தேன், பெண்ணாகவே வாழ்கிறேன், பெண்ணாகவே போட்டியிடேன்” என்று பேசினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in